இம்மாதம் 11 ஆம் தேதி சுமார் 5 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாக உள்ள நிலையில், அவைகளில் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் இன்றி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அதிகப்படியான திரையரங்குகளில் ‘வேலையில்லா பட்டதாரி 2’ ரிலீஸ் ஆகிறது.
மலேசியாவில் மட்டும் 108 திரையரங்குகளில் 550 திரைகளில் வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மலேசியாவில் வேறு எந்த நடிகரின் படத்துக்கும் இவ்வுளவு திரைகள் கிடைத்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...