ரஜினி, கமல், விஜய், அஜித் என ஒட்டு மொத்த தமிழ் சினிமா நடிகர்களையும், தமிழ்ப் படங்களையும் கலாய்க்கும் வகையில் வெளியான ‘தமிழ் படம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் ‘ரெண்டாவது படம்’ என்ற இரண்டாவது படத்தை இயக்கி முடித்தாலும், அப்படம் இன்னும் ரிலிஸ் ஆகவில்லை.
இந்த நிலையில், மீண்டும் தமிழ் படம் போன்ற ஒரு படத்துடன் களம் இறங்கியுள்ள சி.எஸ்.அமுதன், அப்படத்தை தமிழ் படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்க உள்ளார். இந்த படத்திற்கு ‘தமிழ் படம் 2.0’ என்று தலைப்பு வைத்து டைடிலிலே ரஜினியை கலாய்த்துள்ளார்கள்.
சிவா ஹீரோவாக னடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா மேனன் நடிக்க, இவர்களுடன் சதிஷ், திஷா பாண்டே, சந்தான பாரதி, கலைராணி, கஸ்தூரி, மனோபாலா, R.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், OAK சுந்தர், அஜய் ரத்னம், ஜார்ஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கதை, திரைக்கதை எழுதி சி.எஸ்.அமுதன் இயக்கும் இப்படத்திற்கு கே.சந்துரு வசனம் எழுதுகிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் இசையமைக்கிறார். கார்கி, சி.எஸ்.அமுதன், தியாகு, கே.சந்துரு ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர்.
ஷசிகாந்த் தயாரிக்கும் இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...