பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் ‘நாச்சியார்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், டீசரின் முடிவில் ஜோதிகா அசிங்கமாக பேசியது தான்.
இதனால், பலர் ஜோதிகாவுக்கும், இயக்குநர் பாலாவுக்கும் கண்டனம் தெரிவித்ததோடு, சிலர் இரண்டு பேர் மீது வழக்கும் தொடர்ந்தார்கள். அதன்படி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் பாண்டியன் என்பவர், கரூர் மாவட்ட நீதிமன்ற மாவட்டத்தில் ஜோதிகா மற்றும் இயக்குநர் பாலா மீது வழக்கு தொடர்ந்தார். மனுவில், ஜோதிகா பேசிய வசனத்தால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் அவர் மீதும், இயக்குநர் பாலா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதி, ஜோதிகா பேசிய வசனத்தால் யார் யார், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், என்ற பட்டியலை நீதுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தலித் பாண்டியனுக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணையை 11 ஆம் தேதி தள்ளி வைத்தார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...