‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்த அனுஷ்கா, அப்படத்திற்குப் பிறகு தனது உடல் எடையை குறைக்க ரொம்பவே சிரமப்பட்டு விட்டார். எதை எதையோ செய்த அனுஷ்காவால், தனது உடல் எடையை பெரிய அளவில் குறைக்க முடியவில்லை. இதன் காரணமாகவே ‘பாகுபலி 2’ வில் அவர் குண்டாக கானப்பட்டார்.
இதற்கிடையே ‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு ‘பாக்மதி’ படத்தில் மட்டுமே நடித்து வந்த அனுஷா, வேறு எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளாமல், தனது உடல் எடையை குறைப்பதில் முழு கவனம் செலுத்தி வந்தார். அவரது தொடர் போராட்டம் காரணமாக தற்போது அனுஷ்காவின் உடல் எடை அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு குறைந்துவிட்டது.
இந்த நிலையில், தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டதால் அனுஷ்காவுக்கு முதுவலி ஏற்பட்டுள்ளதாம். தற்போது வலி அதிகமாகியிருப்பதால் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்தவர், பிறகு தனது நலவிரும்பிகள் அறிவுரைப்படி ஆயுர்வேத சிகிச்சை எடுக்க முடிவு செய்து, இப்போது கேரளாவில் ஆயுர்வேத மருத்துவனையில் முகாமிட்டுள்ளாராம்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...