விஷால் தலைமையிலான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக் குழு கூட்டத்தில், ஒரு அணியினர் தகாத வார்த்தையில் பேசியதால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் சங்க தலைவர் விஷால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு அளித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சங்கத்தின் செயல்பாடுகள் சரியில்லை என்றும் ஊழல் நடந்திருப்தாகவும் சேரன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் குழு புகார் தெரிவித்தது. விஷால் பதவி விலக வேண்டும் என்றும் சில உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதன் காரணமாக விஷால் தரப்பினருக்கும், சேரன் தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது எல்லை மீறிப்போனதால் பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் நடிகர் விஷால் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களை சந்தித்த விஷால், ”காழ்ப்புணர்ச்சியால் நல்ல விஷயங்களுக்கு சிலர் தடையாக உள்ளனர். எதிர்ப்பை பதிவு செய்த முறை தவறானது. சங்கத்தில் ஊழல் என ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் தரக்குறைவாக நடந்த செயல்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தரக்குறைவாக நடந்தவர்களை நீதிபதி கவனித்து கொண்டிருந்தார்” என கூறினார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...