சிவகார்த்திகேயனின் 10 வது படமான ’வேலைக்காரன்’ இம்மாதம் வெளியாக உள்ளது. தற்போது படம் ரிலீஸ் வேலைகளில் சிவா பிஸியாகி உள்ளதோடு பதட்டதோடும் இருக்கிறார். காரணம், அவரது படங்களிலேயே இப்படம் தான் அதிக பட்ஜெட் படமாகும்.
இப்படத்தின் மூலம் நயந்தாராவுடன் முதல் முறையாக ஜோடி போட்டுள்ள சிவகார்த்திகேயன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடனும் களம் இரங்குகிறார்.
இந்த நிலையில், யாருக்கும் தெரியாத சிவகார்த்திகேயன் பற்றிய ரகசியம் ஒன்று லீக் ஆகியுள்ளது. அதைக் கேட்டு திரையுலகினர் மட்டும் இன்றி ரசிகர்க்ச்ளும் ஷாக்காகியுள்ளனர்.
அதாவது, வேலைக்காரன் படத்தில் நடித்துள்ள சதிஷ் சமீபத்திய பேட்டிஒன்றில், சிவகார்த்திகேயன் பற்றி கூறும் போது, ”சிவகார்த்திகேயன் நீண்ட நாட்களாக இயக்குநர் ஆகவேண்டும் என்று நினைத்து வருகின்றார். அதிலும் அந்த படத்தில் என்னை தான் ஹீரோவாக நடிக்க வைப்பேன் என்றும் கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.
இதில், சிவகார்த்திகேயன் இயக்குநராக வேண்டும் என்று நினைக்கிறார், என சதீஷ் சொன்னதால் திரையுலகினர் ஷாக்காகவில்லை, அவரை ஹீரோவாக வைத்து படம் இயக்க உள்ளார், என்று கூறினாரே, அதுதான் ஷாக்கிற்கான காரணம்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...