நடிகையும் இயக்குநரான லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பற்றி பல சர்ச்சைகள் வருவதுண்டு. நிகழ்ச்சியில் மக்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை உலகிற்கு காட்டி பணம் சம்பாதிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதுபற்றி அவர் கூறுகையில், ”மருத்துவர் ஆலோசனை சொல்வது போல தான் நாங்கள் செய்கிறோம். ஆனால் இதை தொலைக்காட்சியில் போடுவோம் என்று எல்லாம் தான் தெரிஞ்சு தான் மக்கள் வருகிறார்கள். யாரையும் நாங்கள் கூட்டி வருவதில்லை. அவர்களாகவே தான் விரும்பி வருகிறார்கள். இதை வியாபாரம் என்று சொல்லாதீர்கள், மருத்துவர் நோயை குணப்படுத்த பணம் வாங்குவதால் அதை வைத்து வியாபாரம் செய்கிறார் என்று கொச்சைப்படுத்த முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குவதற்காக சில இசையை சேர்த்து ப்ரோமா செய்கிறார்கள் என்பது உண்மை தான். இது தொண்டு நிறுவனம் அல்ல, நான் பணம் வாங்கிக்கொண்டு தான் நிகழ்ச்சி செய்கிறேன். ஆனால் சமூக பொறுப்போடு தான் இதை செய்கிறேன், என்றும் அவர் கூறினார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...