சினிமாக்களுக்கு நிகராக பல கோடி செலவு செய்து விளம்பரங்களும் எடுக்கப்பட்டு வருவதோடு. அதில் நடிக்கும் நடிகர்களுக்கு கோடி கணக்கில் சம்பளமும் வழங்கப்படுகிறது. இதனால், முன்னணி நடிகர் நடிகைகள் பலர் விளம்பரப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அதேபோல், சமீபகாலமாக ஆணுறை தொடர்பான விளம்பரங்களுகும் டிவி களில் அதிகமாக திரையிடப்படுகிறது. இந்த விளம்பரங்களில் நடிக்க பல முன்னணி நடிகைகள் ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்த ஆணுறை விளம்பரம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில், டிவி சேனல்களில் ஆணுறை விளம்பரம் ஒளிபரப்ப மத்திய அரசு புது கட்டுப்பாடு விதித்துள்ளது.
இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய ஒளிபரப்பு மற்றும் தகவல் அமைச்சகம், “குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு ஆர்வத்தையும் உருவாக்க அனுமதிக்கப்படக் கூடாது என்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டி.வி.க்களில் ஆணுறை விளம்பரங்கள் ஒழுங்குப்படுத்திட மத்திய அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இனி டி.வி.க்களில் ஆணுறை விளம்பரங்கள இரவு 10 மணிக்குமேல் காலை 6 மணிக்குள் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...