சமீபகாலமாக பாலியல் கொடுமைக்கு ஆளானது பற்றி பல நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி சினிமாக்களிலும் நடிகைகளுக்கு இத்தகைய அனுபவங்கள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழில் ராதிகா, கஸ்தூரி போன்றவர்கள் தாங்கள் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக கூறினார்கள். அதேபோல் இந்தியில் வித்யா பாலன், கங்கனா ரனவத், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நடிகைகளும் தங்களது பாலியல் பாதிப்புகளை வெளிப்படையாக கூறினார்கள். ஆனால், இவர்கள் யாரால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை மட்டும் கூறவில்லை.
இந்த நிலையில், ’கேங்ஸ் ஆப் வஸ்சேபர்’ படத்தில் நடித்த ரிச்சா சட்டா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிடப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதே சமயம், தனது குடும்பத்தினருக்கு எதுவும் ஆகாது, என்று பாதுகாப்பு உறுதி அளித்தால் தான், பட்டியலை வெளியிடுவேன், என்று கூறியவர், நான் பட்டியலை வெளியிட்ட பிறகும் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும், என்று உறுதியளிக்க வேண்டும், என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...