Latest News :

விஜயை வைத்து படம் இயக்கியவர் 15 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கும் ‘செயல்’
Tuesday December-12 2017

சி.ஆர் கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘செயல்’. ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.   

 

வி.இளையராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஆர்.நிர்மல் படத்தொகுப்பு செய்கிறார். லலிதானந்த், ஜீவன் மயில் ஆகியோர் பாடல்கள் எழுத, கனல் கண்ணன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். பாபா பாஸ்கர், ஜானி ஆகியோர் நடனம் அமைக்க, ஜான் பிரிட்டோ கலையை நிர்மாணிக்கிறார். ஏ.பி.ரவி தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ரவி அப்புலு இயக்குகிறார். இவர் விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 15 வருடங்களுக்கு பிறகு இவர் இயக்கும் படம் இது.

 

படம் பற்றி ரவி அப்புலு கூறுகையில், “வட சென்னையில் தங்கசாலை மார்கெட்டை தன் வசம் வைத்துக் கொண்டிருக்கும் தண்டபாணியை, அங்கு மளிகை சாமான் வாங்க வந்த ஹீரோ எதிர் பாராத விதமாக அடிக்க நேரிடுகிறது. இதனால் மார்கெட்டில் ரவுடி தண்டபாணியின் மீது மக்கள் வைத்திருந்த பயம் போய்விடுகிறது இதனால் அவன் மார்கெட்டை இழக்க நேரிடுகிறது.  மீண்டும் அந்த மார்கெட்டை பிடிக்க வேண்டும் என்றால், ஹீரோவை அதே மார்கெட்டில் வைத்து பொதுமக்கள் பார்க்கும்படி அடிக்க வேண்டும். ஹீரோவை மார்கெட்டில் வைத்து அடித்தால் மட்டுமே ரவுடி தண்டபாணியின் கைக்கு மார்கெட் கிடைக்கும்.

 

இந்த சூழலில் ரவுடி ஹீரோவை அடித்தானா? அல்லது ரவுடியை ஹீரோ அடித்தானா? மார்கெட் யார் வசம் சென்றது என்பதை அதிரடி கலந்த நகைச்சுவையுடன் புதிய கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

இதில் ஹீரோ செய்த ஒரு நல்ல செயல் அடுத்தவர்களையும் செய்ய தூண்டுகிற செயலாக இருக்கும். இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் தருஷி ஹீரோ தன்னிடம் காதலை சொல்ல வரும் போதெல்லாம் அவர் செய்யக்கூடிய  விஷயங்கள் அனைவரையும் கவரும். இதில் ரவுடிகளுக்கு குருவாக ஆடுகளம் ஜெயபாலன் மற்றும் ஓய்வு பெற்ற ரவுடிகளாக முன்டாசுப்பட்டி ராமதாஸும், சூப்பர்குட் சுப்ரமணியம் நடித்துள்ளனர். அதே மார்கெட்டுக்காக போட்டி போடும் ரவுடி கதாப்பாத்திரத்தில் தீனா நடித்துள்ளார். ரவுடிக்கு ஆலோசனை சொல்லும் முக்கிய பாத்திரத்தில் தீ பெட்டி கணேசன் நடித்துள்ளார். ரவுடியின் அடாவடி மனைவியாக வினோதினி நடித்துள்ளார். ஹீரோவின் தாயாராக ரேணுகா நடித்துள்ளார்.” என்றார்.

Related News

1490

செல்வராகவன் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
Monday December-23 2024

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...

மக்களை மகிழ்விக்க வருகிறார் ‘மிஸ்டர்.பாரத்’!
Monday December-23 2024

சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...

சரத்குமாரின் 150 வது படமான ‘தி ஸ்மைல் மேன்’ டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது
Monday December-23 2024

இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...

Recent Gallery