முழு நீளத் திரைப்படம் எடுப்பதற்கு முன்பாக குறும்படம் எடுப்பது போல, பலர் இசை ஆல்பங்களையும் உருவாக்குகிறார்கள். ஒற்றை பாடலாக இருந்தாலும், அதில் திரைப்படத்துக்கு உண்டான அத்தனை அம்சங்களையும் சேர்த்து அசத்தியும் விடுகிறார்கள். அந்த வகையில், இளம் குழு ஒன்று உருவாக்கியுள்ள ‘எனக்கெனவே...’ என்ற இசை வீடியோ ஆல்பம் விரைவில் ரசிகர்களை அசத்தப் போகிறது.
இந்த இளம் குழுவினருடன், ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட ஜாம்பாவான்களும் இந்த இசை வீடியோ பாடலில் பணியாற்றியிருப்பது தனி சிறப்பு.
ரொமாண்டிக் மியூசிகல் ஆல்பமாக உருவாகியுள்ள இந்த வீடியோ பாடலுக்கு கணேசன் இசையமைத்துள்ளார்.
இவர் தான் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்த ‘ப்ருஸ் லீ’ திரைப்படத்தில் இடம்பெற்ற “நான்தான் கொப்பன் டா...” சிங்கள் பாடலுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் எம்.ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் ஸ்ரீ இயக்கியுள்ள இந்த வீடியோ பாடலுக்கு, கவிஞர் முத்தமிழ் வரிகள் எழுத, இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகம் கொண்ட ஜி.வி.பிரகாஷ்குமார் பாடியுள்ளார்.
தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளரான பிரவின் கே.எல் எடிட்டிங் செய்துள்ள இப்பாடலுக்கு சுந்தர் ராகவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் நட்டி நட்ராஜின் துணை ஒளிப்பதிவாளர் ஆவார். அசார் நடனம் அமைக்க, மதன் கலை அமைத்துள்ளார். விளம்பர வடிவமைப்பை மணிகண்டன் கவனித்துள்ளார்.
அழகிய காதல் பாடலாக உருவாகியுள்ள இந்த ஆல்பத்தின் நாயகனாக ராஜேஷ் ராஜன் நடிக்க, நாயகியாக ஸ்முருத்தி நடித்துள்ளார்.
அனுபவம் வாய்ந்த குழுவால் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை மெட்ராஸ் டெக்கீஸ் நிறுவனம் சார்பில் ஜெகதீசன் ஆர்.வி, நவநீத பாபு, நரேன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
விரைவில் இப்பாடலின் பஸ்ட் லுக் மற்றும் புரோமோ வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து முழு பாடலும் வெளியாக உள்ளது. இந்த பாடலை உருவாக்கியுள்ள இதே குழு, ஒன்றாக இணைந்து திரைப்படம் ஒன்றையும் எடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...