தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய்க்கு பல லட்சம் ரசிகர்கள் உண்டு. ஆண்டுக்கு இரண்டு படங்களில் நடித்து தனது ரசிகர்களை மகிழ்வித்து வரும் விஜய், நடிப்பில் தீபாவளி வெளியான மெர்சல் மாபெரும் வெற்றி பெற்றதோடு, ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.
இந்த நிலையில், சிபிஎஸ்இ 3வது வகுப்பு பாடப்புத்தகத்தில் வேஷ்டி சட்டை தமிழர்களின் பாரம்பரியம் என்ற ஒரு தலைப்பில் விஜய்யின் வேஷ்டி சட்டை புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையைப் பற்றிய அந்த வரியில் வேஷ்டி சட்டை தான் தமிழர்களின் பாரம்பரிய உடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, வேலாயுதம் படத்தில் விஜய் வேஷ்டி சட்டையுடன் நடந்து வரும் போட்டோவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...