திரைப்படங்களைக் காட்டிலும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மக்களிடம் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார்கள். அதிலும், தமிழில் டப் செய்யப்படும் இந்தி சீரியல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுவருவதால், பல முன்னணி டிவி சேனல்கள், பல இந்தி சீரியல்களை தமிழில் டப் செய்து ஒளிபரப்பி வருகிறது.
அந்த வகையில், பிரபல தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘இரு மலர்கள்’ என்ற தலைப்பில் இந்தி சீரியல் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரக்யா, இந்தி ரசிகர்களிடம் மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமாக உள்ளார்.
இந்த நிலையில், நடிகை பிரக்யாவுக்கு கொடிய நோயான காச நோய் வந்திருக்கும் தகவல் வெளியாகி திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சமீபத்தில் நடிகை பிரக்யா அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு காச நோய் வந்திருப்பதை அவரே கூறினார். இருந்தாலும் அவர் எந்த ஒரு ஓய்வும் எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்த நோயினால் அவரது உடல் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போவதால், அவர் விரைவில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...