‘விவேகம்’ படத்திற்கு பிறகு அஜித்தின் படத்தை இயக்கப் போவது யார்? என்ற கேள்விக்கு அஜித் சமீபத்தில் பதில் அளிக்குமாறு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, தொடர்ந்து 4 வது முறையாக சிவா அஜித்துடன் இணைகிறார்.
அஜித் ரசிகர்களுக்கு இது கொஞ்சம் கசப்பான செய்தியாக இருந்தாலும், இந்த முறை சிவா ரொம்பவே எச்சரிக்கையாக இருப்பார், என்ற நம்பிக்கையும் உள்ளது. அதற்கு ஏற்றவாறு அஜித்தின் லுக் மற்றும் கதைக் களம் ஆகியவற்றில் சிவா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு திருப்திகரமாகவே உள்ளது.
இப்படம் அரசியல் கதைக்களத்தை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்க, இதில் அஜித்துக்கு வில்லனாக நடிகர் அரவிந்த் சாமி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
‘தனி ஒருவன்’ படத்தில் தனது அழகிய வில்லத்தனத்தால் மிரட்டிய அரவிந்த் சாமி, தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவதால், வில்லனாக நடிப்பதில்லை என்ற முடிவில் இருந்தாலும், அஜித்துக்காக தனது முடிவை மாற்றிக் கொண்டு வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...