திரைப்படம் மற்றும் டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு எந்த அளவுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதே அளவுக்கு டிவி தொகுப்பாளினிகளுக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமூக வலைதளங்களில் அவர்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள்.
அந்த வகையில், மும்பையை சேர்ந்த அர்பிதா திவாரி, என்ற டிவி தொகுப்பாளினி மக்களிடம் மிக பிரபலமானவராக இருந்தார்.
அர்பிதா தற்போது மர்மமான முறையில் அடுக்கு மாடி குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து பார்ட்டி நிகழ்ச்சிகள் மற்றும் ஒரு சில டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தன்னுடைய நண்பர் பங்கஜ் ஜாதவ் உடன் மல்வானியில் உள்ள நண்பரது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு அதிக நேரமானதால், ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.
மறுநாள் காலை 7 மணிக்கு நண்பர்கள் எழுந்து பார்த்த போது, பாத்ரூம் மூடிய நிலையில் இருந்துள்ளது. இதனால், மறுபடியும் நண்பர்கள் படுத்து தூங்கியுள்ளனர். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டு பார்த்த போது, அதே போன்று மூடிய நிலையில் இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த நண்பர்கள் பாத்ரூம் லாக்கை உடைத்து பார்த்த பொழுது, அர்பிதா ஜன்னல் வழியாக குதித்து இறந்துள்ளது தெரியவந்துள்ளது. கட்டடத்தின் பின்பகுதியில் உள்ள குழாயில் தொங்கியபடி கிடந்த அவரது சடலத்தை மீட்ட போலீசார் அர்பிதாவின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...