தயாரிப்பாளராக இருந்து நடிகரான ஆர்.கே.சுரேஷ், வில்லனாக நடிப்பதோடு, பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அப்படி அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் ஒன்று தான் ‘பில்லா பாண்டி’.
ஜெ.கே பிலிம் புரொடக்ஷன் சார்பில் கே.சி.பிரபாத் தயாரிப்பில் சரவன சக்தி இயக்கும் இப்படத்தில் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக ‘மேயாத மான்’ இந்துஜா நடிக்க, சாந்தினி மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கே.சி.பிரபாத் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க, தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர், மாஸ்டர் கே.சி.பி.தர்மேஷ், மாஸ்டர் கே.சி.பி.மிதுன் சக்ரவர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர்.
இதில் ஆர்.கே.சுரேஷ், அஜித் ரசிகர் வேடத்தில் நடிப்பதோடு, சாதீய வெறியை கடுமையாக எதிர்க்கும் விதமான காட்சிகளிலும் நடித்துள்ளாராம். சூரி கெஸ்ட் ரோலிலும், சிறப்பு தோற்றத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இசை வெளியீடு நடக்கவுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...