தனக்கேற்ற படங்களை தேர்வு செய்து நடிப்பத்திலும், தயாரிப்பத்திலும் உதயநிதி ஸ்டாலின் கை தேர்ந்தவர் எனக் கூறலாம். விரைவில் திரைக்கு வர இருக்கும் இயக்குநர்ர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகும் ‘நிமிர்’ அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு சீனு ராமசாமி இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இது குறித்து கூறிய உதயநிதி ஸ்டாலின், “எனக்கு சீனு ராமசாமியின் படங்கள் என்றால் மிக மிக பிடிக்கும். அவரது படங்களில் மனித உணர்வும், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் கதை அம்சமும் நிச்சயம் இருக்கும்.ஏற்கனவே தேசிய விருது பெற்ற ‘நீர் பறவை’ படத்தை தயாரித்தவன் என்ற முறையில் அவருடன் இணைந்து பணியாற்றுவது எங்கள் நிறுவனத்துக்கு மிகுந்த சந்தோஷம்.இப்போது அவரது இயக்கத்தில் தயாரித்து நடிப்பதில் எனக்கு பொறுப்பும் , விருப்பும் அதிகம். ஜனவரி மாதம் 19ஆம் தேதி படப்பிடிப்பு துவங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர் , தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது.” என்று தெரிவித்தார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...