‘டிக் டிக் டிக்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்தப் படத்திற்கு ‘அடங்க மறு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சரண், மிஸ்கின், அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இயக்கும் இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடேட் தயாரிக்கின்றது.
ஜெயம் ரவிக்கு இணையாக ராஷி கண்ணா நடிக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, விஜி வசனம் எழுதுகிறார். லால்குடி இளையராஜா கலையை நிர்மாணிக்க, ஸ்டண்ட் சிவா ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். பிருந்தா நடனம் அமைக்கிறார்.
இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கிய இப்படம் குறித்து தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் கூறுகையில், “மக்களின் பேராதரவோடு எங்கள் நிறுவனம் சின்னத்திரை தயாரிப்பில் இவ்வளவு காலமாக பெரும் வெற்றி பெற்று நன்பெயரை சம்பாதித்துள்ளது. இந்த வெற்றி பயணத்தை இந்த படம் மூலம் சினிமாவிலும் தொடர முனைப்போடு உள்ளோம்.
இப்படத்தில் ஜெயம் ரவியுடன் பணியாற்றுவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. 'மாஸ்' மற்றும் 'கிளாஸ்' என இரண்டு தரப்பினரும் ரசிக்கும் நடிகர் அவர். இப்பட இயக்குநர் கார்த்திக் தங்கவேலுக்கு இது முதல் படமாக இருந்தாலும் உதவி இயக்குநராக பெருமளவு அனுபவம் பெற்றவர். கதாநாயகியாக நடிப்பவர் ராஷி கண்ணா. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இந்த புதிய தொடக்கத்தின் மூலம் பல புதிய திறமைகளை ஆதரவளித்து அவர்களோடு பணியாற்ற முனைப்போடு உள்ளோம்.” என்றார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...