’விவேகம்’ படத்தை தொடர்ந்து ’விஸ்வாசம்’ படத்தின் மூலம் அஜித் மீண்டும் சிவா உடன் இணைந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு கசப்பான செய்தியாகவே அமைந்திருக்கிறது. இருந்தாலும், அஜித் கொடுத்த வாக்குக்காகவே இந்த கூட்டணி மறுபடியும் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, அஜித் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பில்லா’ படம் வெளியாக 10 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், இதை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த கொண்டாட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்ட இயக்குநர் விஷ்ணு வர்தன், தனது மலரும் நினைவுகளை டிவிட்டரில் வெளியிட்டுள்ளவர், அஜித்துடன் நான் இணைந்த முதல் படம் 'பில்லா’. பத்து வருடங்கள் போனதே தெரியவில்லை. அஜித்துக்கும், இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கும் எனது நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு திட்டம் மனதில் இருப்பதாகவும், இது தொடர்பாக விரைவில் ஒரு செய்தியை சொல்லப் போவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து ஏற்கனவே அஜித்துக்காக ராஜராஜ சோழன் கதையை எழுதிய விஷ்ணு வர்தன், அப்படத்தை தான் தற்போது அஜித்தை வைத்து இயக்க ரெடியாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆக, அஜித்துடன் விஷ்ணு வர்தன் இணையும் படம் மிகப்பெரிய படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...