திரையுலகில் நடிகர்ள் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில், சில நடிகைகளும் தற்போது நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்க தொடங்கியுள்ளார்கள். தமிழ் சினிமாவில் நயந்தாரா சுமார் ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அதேபோல், தெலுங்கு சினிமாவிலும் சில நடிகைகள் கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்கள்.
தென்னிந்திய சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் தன் நடிகைகளுக்கு அதிக சம்பளம் என்பது அனைவரும் அறிந்தது தான். அந்த பாலிவுட் நடிகைகளையே தற்போது சம்பள தொகையில் கலங்கடித்துள்ளார் விஜயின் ஹீரோயின்.
ஆம், ‘தமிழன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை என்றாலும், பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினானார். மேலும் தேசிய விருது பெற்ற அவர், பல ஹிட் படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் டிவி தொடர்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், பிரியங்கா சோப்ராவுக்கு 1 நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுக்க தனியார் சேனல் ஒன்று முன் வந்துள்ளது.
வட இந்தியாவில் பிரபலமாக இருக்கும் சேனலான ஜீ டிவி, ஆண்டு தோறும் ‘ஜீ விருதுகள்’ என்ற தலைப்பில் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நிகழ்ச்சியான இந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்காக நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.1 கோடி கொடுக்க முன் வந்திருக்கிறதாம்.
விருது வழங்கும் விழாவில் பிரியங்கா சோப்ரா நடித்த படத்தில் இருந்து ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆட உள்ளாராம். 5 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த பாடலுக்கு நடனம் ஆட அவர் ரூ.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரியங்கா சோப்ரா, டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் அவருக்கு இப்படி ஒரு மவுசு என்று பாலிவுட்டில் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...