Latest News :

வீர மரணமடைந்த பெரியபாண்டி உடலுக்கு நடிகர் கார்த்தி மரியாதை செலுத்தினார்
Saturday December-16 2017

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் உள்ள சாலை புதுரை சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். இவர் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை கேஸில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராஜஸ்தானுக்கு சென்று அங்கு இருந்த கொள்ளையர்களால் கொல்லபட்டு மரணமடைந்தார். அன்னாரின் உடல் அவருடைய சொந்த ஊரான சாலை புதூரில் நேற்று முன் தினம் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

 

தென்காசியில் படபிடிப்பில் இருந்த நடிகர் கார்த்தி அங்கு இருந்து 2 மணி நேர தொலைவில் உள்ள சாலை புதூருக்கு சென்று பெரியபாண்டியன் அவர்களின் நினைவிடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, “பெரியபாண்டியன் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவருடைய மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம் “பெரிய பாண்டியன் மிகவும் தைரியமானவர் என்றும். அவர் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற அதே நாளில் தான் நீங்கள் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பார்த்தேன். தீரன் படத்தை பார்த்ததும் இவ்வளவு கொடூரமான கொலைகார கொள்ளை கும்பலா? இதை போன்ற ஒரு கும்பலை தான் நம்முடைய கணவரும் பிடிக்க சென்றிருப்பாரோ, என்று தோன்றியது. அதன் பின் அவரை தொலைபேசியில் அழைத்து பேசினேன் தீரன் படம் பார்த்தேன் அதில் வந்த பயங்கரமான காட்சிகளை பற்றி கூறி என்னுடைய கணவரிடம் கவனமாக இருங்க, உங்களுடன் இன்னும் சில காவல் துறை போர்சை அழைத்து செல்லுங்கள். எனக்கு மனது சரியில்லை என்று கூறினேன். நான் அவருக்கு எதுவும் நடந்துவிட கூடாது என்று பயந்துகொண்டே இருக்கையில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்தது” என்றார்.

 

உண்மை சம்பவமான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிக்கும் போதே எனக்கு எனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என்று மனஅழுத்தமாக இருந்தது. தற்போது அது உண்மையாகவே ஒரு இன்ஸ்பெக்டருக்கு நடந்துள்ளது எனக்கு வருத்தத்தை தந்துள்ளது.

 

பெரியபாண்டியன் மிகவும் நல்ல மனிதர். அவர் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த 15 சென்ட் இடத்தை அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்ட கொடுத்துள்ளார். அவர் கூலி வேலை செய்து வாழ்ந்த ஒரு தாயின் மகன் என்பதால் எப்போதும் தன்னை போல் கஷ்டம் இல்லாமல் எல்லோரும் வாழவேண்டும் என்று நினைப்பவர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அதே நல் எண்ணத்தில் தான் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் பகுதிக்கு சென்று வீர மரணம் அடைந்துள்ளார். அங்கு மக்கள் அனைவரும் அவருடைய இடத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி அவருடைய பெயர் வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். நமது அரசாங்கம் கண்டிப்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் நிறைய Infrastructure வழங்க வேண்டும். ஈரம் காயாத அவருடைய சாமாதியில் நிற்க்கும் போது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது. அவருடைய ஆன்மாவுக்கும், குடும்பத்தாருக்கும் பிராத்தனை செய்கிறேன்.” என்றார்.

Related News

1537

செல்வராகவன் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
Monday December-23 2024

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...

மக்களை மகிழ்விக்க வருகிறார் ‘மிஸ்டர்.பாரத்’!
Monday December-23 2024

சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...

சரத்குமாரின் 150 வது படமான ‘தி ஸ்மைல் மேன்’ டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது
Monday December-23 2024

இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...

Recent Gallery