ஆபாச பட நடிகையான கனடாவைச் சேர்ந்த சன்னி லியோன், தற்போது பாலுவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழ்ப் படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய அவர், விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படம் ஒன்றில் ஹீரோயினாகவும் நடிக்க உள்ளார்.
இதற்கிடையே, வரும் 2018 ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடும் விதத்தில் பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சன்னி லியோன் நடனம் ஆட இருக்கிறார்.
‘சன்னி நைட் பெங்களூர் 2018’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு, கர்நாடகாவின் ரக்ஷனா வேதிகா சேனா என்ற அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, போராட்டமும் நடத்தி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் சுமார் 15 மாவட்டங்களில் பரவியுள்ள இந்த போராட்டாத்தால் பெங்களூரே தற்போது எரிய தொடங்கியுள்ளது.
நமது கலாச்சாரத்தை சீரழித்த நடிகை சன்னி லியோனை பெங்களூரில் அனுமதிக்க மாட்டோம், என்ற கோஷத்தோடு கர்நாடகாவில் நடைபெற்று வரும் போராட்டத்தால், சன்னி லியோன் இதில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. அதே போல், அந்த நடன நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...