நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் ‘தானா சேர்ந்த கூட்டம்’, தெலுங்கில் ‘கேங்’ (Gang) என்ற தலைப்பில் வெளியாகிறது. இதை தொடர்ந்து தமிழில் டீசர் வெளியான அதே நாளில் தெலுங்கிலும் டீசர் வெளியானது. தெலுங்கிலும் வரவேற்பு பெற்ற டீசர் 3 லட்சம் லைக்ஸ் பெற்று, தெலுங்கு சினிமாவில் அதிகம் லைக் பெற்ற டீஸர் என்ற சாதனையை நிகழ்த்தியது.
இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘அக்யாதவாசி’ (Agnyaathavaasi) திரைப்படத்தின் டீசர் வெளியான 6 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் பெற்று சூர்யாவின் சாதனையை முறியடித்துள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...