‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’ என தொடர்ந்து ஹிட் படங்களை இயக்கி வரும் அட்லீ, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பதோடு, ரசிகர்கள் மற்றும் மாஸ் ஹீரோக்களுக்கு பிடித்த இயக்குநராகவும் உள்ளார். இருந்தாலும், அவர் பழைய படங்களை காப்பியடிப்பதாக அவர் மீது சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இத்தகைய குற்றச்சாட்டுக்கு அட்லீ, விளக்கம் அளித்தாலும் திரையுலகைச் சேர்ந்த சிலர் அவர் மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஜெய் - அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ‘பலூன்’ படத்தை இயக்கியுள்ள இயக்குநர் அட்லீயை தாக்கி பேசியிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற ‘பலூன்’ பிரஸ் மீட்டில் பேசிய அப்பட இயக்குநர் சினிஷ், ”பலூன் படத்தில் பல ஹாலிவுட் படங்களின் பாதிப்பு இருக்கும், இதை நான் ஓபனாக சொல்ல விரும்புகின்றேன். ஏனெனில் ’மௌன ராகம்’ போல் ஒரு படத்தை எடுத்துவிட்டு நான் மௌன ராகமே பார்க்கவில்லை என்று கூறமுடியாது.” என்று அட்லீயை மறைமுகமாக தாக்கி பேசினார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...