பாலிவுட்டில் கவர்ச்சி வெடியாக திகழ்ந்து வரும் சன்னி லியோன், கடைசியாக நடித்த இந்தி படம் ‘டெரா இண்டெசார்’ தோல்வியடைந்ததை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து கடை திறப்பு விழாக்களில் கவனம் செலுத்தி வந்த சன்னி லியோன், புத்தாண்டுக்கு பெங்களூரில் நடனம் ஆட இருந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில், சன்னி லியோனை விலங்குகளுடன் பழக விட்டு புதிய நிகழ்ச்சி ஒன்றை நடத்த பிரபல டிவி சேனல் முடிவு செய்துள்ளது.
உலக புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சியான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற நிகழ்ச்சியை சன்னி லியோன் தொகுத்து வழங்கப் போகிறார். இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி ஜீத் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
இது குறித்து கூறிய சன்னி லியோன், “டிஸ்கவரி ஜீத் சேனலில் பிரபல நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க உள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. இது என்னை பிரபலப்படுத்திக் கொள்ள இன்னும் உதவிகரமாக இருக்கும். அதே சமயம், டிவி நிகழ்ச்சிகளை பார்க்காத ரசிகர்களையும் இந்த நிகழ்ச்சியை பார்க்க நான் தூண்டுதலாக இருப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...