‘மெர்சல்’ வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயந்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், விவசாயத்தை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கும் முருகதாஸ், படத்திற்கு ‘கலப்பை’ என்று தலைப்பு வைத்துள்ளதாகவும், படத்தில் விஜய் ஊனற்றவராக நடிப்பதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், இதை மறுத்துள்ள படக்குழுவினர், விஜயின் 62 வது படம் குறித்து பரவும் செய்திகள் அனைத்தும் வதந்தியே. இது எந்தமாதிரியான படம், விஜயின் கெட்டப் போன்றவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும், என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...