Latest News :

’சென்னை 2 சிங்கப்பூர்’ படம் மூலம் தயாரிப்பாளரான இசையமைப்பாளர் ஜிப்ரான்
Monday August-07 2017

‘வாகை சூடவா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிபரான், தனது தனித்துமான இசையின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இசையமக்ப்பாளர்களில் ஒருவரானதோடு, கமல்ஹாசனின் பேவரைட் இசையமைப்பாளராகி அவரது படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருபவர், பிஸியான இசையமைப்பாளராக இருந்தாலும், அவ்வபோது சமூகத்திற்காக இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருபவர், தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார்.

 

சிங்கபூர் மீடியா டெவலப்மெண்ட் அத்தாரிட்டி துணையோடு காமிக்புக் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் அப்பாஸ் அக்பர் இயக்கியிருக்கிறார். புதுமுகங்கள் ஆனந்த், அஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருப்பதோடு, தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார்.

 

எந்தவித லாஜிக்கும் பார்க்காமல், கவலையை மறக்கடித்து கலகலப்பாக சிரிக்க வைக்கும் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதோடு, இப்படத்தின் ஆறு பாடல்களையும் ஆறு நாடுகளில் ரிலீஸ் செய்த விதமும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு காரிலேயே பயணித்து சாதனைப் புரிந்த இப்படக்குழுவினருக்கு இப்படம் தான் அறிமுகம் என்றாலும், இதில் நடித்துள்ள முக்கிய நடிகர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த பிரபல தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆவார்கள். இயக்குநர் அப்பாஸ் அக்பர், சிங்கப்பூரில் பல விளம்பரப்படங்கள், டாக்குமெண்டரி படங்களை இயக்கியிருக்கிறார்.

 

இப்படம் குறித்து பேசிய அப்பாஸ் அக்பர், “சென்னையில் இருந்து இளைஞர் ஒருவர் சிங்கப்பூருக்கு செல்கிறார், அங்கு அவருக்கு ஏற்படும் அனுபவம் தான் படம். ரொம்ப யோசிக்க கூடிய அளவுக்கு எதையும் செய்யவில்லை. ஜாலியான ஒரு படமாகத்தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன். படத்தை பார்ப்பவர்கள் சிறித்துக் கொண்டே இருப்பதோடு, படம் முடியும் போது கவலைகளை மறந்து சந்தோஷமாக வெளியே வருவார்கள். அந்த அளவுக்கு படம் ஜாலியான ஒரு படமாக இருக்கும்.” என்றார்.

 

ஜிப்ரான் பேசும் போது, “அப்பாஸ் அக்பர் எனது நெருங்கிய நண்பர். நண்பர்களாக இணைந்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். முதலில் இசையமைப்பாளராகத்தான் இப்படத்தில் நுழைந்தேன். பிறகு தயாரிப்பாளர்களில் நானும் ஒருவனாகிவிட்டேன். படத்தின் பாடல்கள் எப்படி ரசிகர்களை கவர்ந்திருக்கிறதோ, அதுபோல படமும் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். ரொம்ப ஜாலியான ஒரு படம். படத்தை பார்த்த சிங்கப்பூர் நிறுவனம்  ஒன்று மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இப்படத்தை வெளியிட முன்வந்துள்ளது.” என்றார்.

 

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பது போல, சமீபத்தில் சென்னையில் உள்ள பல கல்லூரி மாணவர்களுக்கு ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த மாணவர்கள், ஆரம்பம் முதல் முடிவு வரை கலகலப்பாக சிறித்துக் கொண்டு உற்சாகமாக படத்தை ரசித்தது, படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. 

 

அதே உற்சாகத்தோடு, படத்தின் வெளியீட்டு பணியில் ஈடுபட்டுள்ள ‘சென்னை 2 சிங்கப்பூர்’ குழுவினர் படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


Related News

155

“தம்பி கலக்கிட்டான்” - கவுதம் கார்த்திக்கை மனம் திறந்து பாராட்டிய நடிகர் ஆர்யா
Sunday February-23 2025

லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்...

”சினிமாவில் தனிப்பட்டவர்களின் வெற்றி சாத்தியமில்லை” - பா.விஜய்
Sunday February-23 2025

பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா...

’நிறம் மாறும் உலகில்’ அம்மாக்களைப் பற்றிய தனித்துவமான படமாக இருக்கும் - இயக்குநர் பிரிட்டோ நெகிழ்ச்சி
Thursday February-20 2025

சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

Recent Gallery