தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஹன்சிகா, விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துவிட்டார். இருந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் மட்டும் மிக மிக குறைவாக கிடைத்து வருகிறது. இதற்கு காரணம் தனது உடல் எடை அதிகரிப்பு தான் என்று நினைத்தவர், கஷ்ட்டப்பட்டு உடல் எடையை குறைத்து சிக்கென்ற உருவத்திற்கும் மாறிவிட்டார். இருந்தாலும் பட வாய்ப்புகள் மட்டும் வந்தபாடியில்லை.
தற்போது புதுமுக ஹீரோயின்களின் எண்ட்ரியாலும் ஹன்சிகாவுக்கு வாய்ப்புகள் குறைந்து வருகிறதாம். தன்னுடன் நடித்த நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு தொந்தரவு செய்யவும் தொடங்கிவிட்டாராம். அப்படியும் ஹன்சிகாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. காரணம் அவர் கேட்கும் சம்பளம் தானாம். என்னதான் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் சம்பளத்தை மட்டும் அதிமாக கேட்டு வந்தாராம்.
இந்த நிலையில், தனது சம்பளத்தால் தான் தனக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை, என்பதை புரிந்துக் கொண்ட ஹன்சிகா தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டாராம். மேலும், இந்த தகவலை சில தயாரிப்பாளர்களிடமும் தெரிவித்து வருகிறாராம். இதை கேட்ட தயாரிப்பாளர்கள், ஹன்சிகா போல நயந்தாரா உள்ளிட்ட நடிகைகளும் சம்பளத்தை குறைத்தால் நன்றாக இருக்குமே, என்று கூறுகிறார்களாம்.
எப்படியோ, ஹன்சிகாவின் இந்த அதிரடி முடிவு பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறதாம்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...