அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘அருவி’ பலராலும் பாராட்டப்பட்டு வருவதோடு, விமர்சனம் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் அதிதி பாலன் என்ற அறிமுக நாயகி நடித்துள்ளார். இவரது நடிப்பு குறித்து ஊடகங்கள் வெகுவாக பாராட்டி வருவதோடு, இவருக்கு பல விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தில் அதிதி பாலனை நடிக்க வைப்பதற்கு முன்பாக முன்னணி ஹீரோயினை நடிக்க வைக்கவே இயக்குநர் அருண் பிரபு விரும்பினாராம். அதற்காக அவர் மூன்று முன்னணி ஹீரோயின்களிடம் கதையும் சொல்லியிருக்கிறார். அவர்கள் நயந்தாரா, ஸ்ருதி ஹாசன் மற்றும் சமந்தா ஆகியோர் ஆவர்.
கதையை கேட்ட இந்த மூன்று ஹீரோயின்களிலும் படத்தில் நடிக்க விரும்புவதாக கூறினாலும், படத்தின் இறுதிக் காட்சியான கடைசி 15 நிமிடக் காட்சிகளுக்காக உடல் எடை குறைப்பதில் சற்று தயக்கம் காட்டினார்களாம். மேலும், உடை எடையை குறைக்க காலதாமதம் ஆவதோடு, அதற்காக பிற படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்பதாலயே நடிக்கவும் மறுத்துவிட்டார்களாம்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...