ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், ரஜினி மற்றும் கமல் ஆகியோர் அரசியலுக்கு வந்தால், தான் யாருக்கு ஆதரவு தெரிவிப்பேன், என்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கமல்+ரஜனி ரசிகன் நான். அதிலும் ரஜனி சார் எனக்கு மிக நெருக்கமான நண்பர்! என் வளர்ச்சியில் அக்கரை காட்டியவர். பாபுஜி என்ற தயாரிப்பாளரிடம் "பார்த்திபனை ஹீரோவா போட்டு படம் எடுங்கள்" எனத்தூண்டியவர். Ktvi பார்த்து மெச்சியவர். அவருடன் விவாதங்களில்... என் எதிர் கருத்தை ரசித்து மதிப்பவர். உதாரனத்திற்கு "எந்த கோவிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள் இல்லையோ அந்த கோவிலுக்கு உள்ளே தான் கடவுள் இருக்கிறார்" என்ற என் அக(ழ்வு) ஆராய்ச்சி கூட மறுப்பாக இருந்தாலும் வெறுப்பாக நோக்க மாட்டார். நேற்றைய என் பேட்டி கூட அவர் சொன்ன அதே வார்த்தைகளை வழக்கமான என் நகைச்சுவை கலந்து ரசிக்க சொன்னதேயன்றி அவரது ரசிகர்களை புண்படுத்தும் நோக்கமில்லை. அப்படியானால் அது என்னையும் தானே புண்படுத்தும்? (காண்க முதல் வரி).
இதே கேள்விகளுக்கு, இதே பதில்களை, இதே சிரிப்புடன், போன மாதமும் சொன்னேன் சிறு சலசலப்புமில்லை. ஆனால் நேற்றைய மேடையும் சூழலும் ஏதோ ஒரு அரசியலை கிண்டியிருப்பதை அறிகிறேன்.
இருவரும் அரசியலுக்கு வந்தாலும் ஆதரிப்பேன். காரணம், அரசியலில் ஆதாயம் தேவையில்லை இருவருக்கும். ஆனால் விமர்சிப்பது தனிமனித உரிமை. பொது வாழ்வில் விமர்சனங்களை எதிர் கொள்ள இன்னும் தொண்டரகளாக மாறாத ரசிகர்களுக்கு சிரமமாகவே இருப்பதால் அவர்களின் கோபத்தை சிலர் கொச்சையாகவும், பலர் ரஜனி சாரின் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் "நீங்களுமா?" என அதிர்ந்திருக்கிறார்கள். அவர்களின் மென்மையான உணர்வு புரிவதால் இந்த விளக்கத்தை மனப்பூர்வமாக தெரிவிக்கிறேன். நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அந்த நாள் விரைவில் வர வேண்டுமென அவர் வணங்கும் ஆண்டவனை நானும் வேண்டுகிறேன்!, என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...