தமிழ் சினிமாவில் ஓபனிங் உள்ள நடிகர்கள் ரஜினி மற்றும் கமலுக்கு பிறகு விஜய் மற்றும் சூர்யா தான். இவர்களுக்கு பிறகு ஓபனிங் உள்ள நடிகராக சிவகார்த்திகேயன் உருவெடுத்திருந்தாலும், இவருக்கு முன்பாக சினிமாவுக்கு வந்த சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுக்கு ஓபனிங் என்பதே கிடையாது. படம் நல்லா இருந்தா ஓடும், இல்லை என்றால் அம்புட்டு தான்.
நிலை இப்படியிருக்க, சூர்யா தரப்பினர் தொடர்ந்து விஜயை சீண்டு வருவது பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பைரவா படத்தின் போது தயாரிப்பு தரப்பு ரூ.100 கோடி வசூல் செய்திருப்பதாக விளம்பரம் கொடுத்தது.
இந்த விளம்பரத்தை கிண்டல் செய்யும் விதத்தில் பேசிய சூர்யா உறவினரும், தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா, ”100 கோடி ரூபாய் வசூல் என்று விளம்பரம் செய்துவிட்டால், அவர்கள் பெரிய நடிகளாகிவிட முடியாது. உண்மையாகவே யார் வசூல் செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். சூர்யா நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றிப் படங்கள் தான். ஆனால், நாங்கள் இதுவரை இத்தனை கோடி வசூல், அத்தனை கோடி வசூல் என்று விளம்பரம் செய்ததில்லை. சூர்யா சார் ரசிகர்கள் கூட அதுபோன்று விளம்பரம் செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். அவர்களது கோரிக்கைகாக முதல் முறையாக வசூலை தெரிவிக்க உள்ளோம்,” என்று கூறியவர் ‘சிங்கம் 3’ படத்திற்கு பல கோடி வசூல் என்று விளம்பரம் செய்தார்.
இப்படி ஞானவேல்ராஜா விஜயை தாக்கி பேசினாலும், விஜய் தரப்பில் இது குறித்து எதுவும் கூறவில்லை.
இந்த நிலையில், சூர்யாவின் மற்றொரு உறவினரும், தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அருவி’ படத்தில் விஜயை வெளிப்படையாக கலாய்த்திருக்கிறார்கள்.
அதாவது படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில், ”விஜய் நடித்ததில் நல்ல படம், எப்படி கண்டுப்பிடிப்பது?” என கூறியிருப்பார்கள்.
இந்த வசனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள விஜய் ரசிகர்கள் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் அருவி பட இயக்குநர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
கில்லி, குஷி, காதலுக்கு மரியாதை, லவ் டுடே உள்ளிட்ட பல மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கும் விஜயின் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ படம் கூட சாதனை வெற்றியை படைத்திருக்கும் நிலையில், ‘அருவி’ படத்தில் இடம்பெற்ற விஜய் குறித்த வசனம், சூர்யா தரப்பினர் திட்டமிட்ட செயல், என்று சிலர் கூறுகின்றனர்.
நடிகர் சூர்யா, தனது உறவினர்கள் பலரை தயாரிப்பாளர்களாக்கி, அவர்கள் பெயரில் தனது பணத்தை முதலீடு செய்து பல படங்களை தயாரித்து வருவதோடு, இப்படி ஒரு முன்னணி நடிகரின் பெயரை திட்டமிட்டு கெடுப்பது சரியில்ல, என்றும் விஜய் ரசிகர்கள் கூறுகிறார்கள்.
சூர்யா தரப்பினரின் இத்தகைய செலுக்கு இதுவரை எந்தவித பதிலடியும் கொடுக்காத விஜய் ரசிகர்களின் பதிலடி எப்படி இருக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...