முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான அஞ்சலி, குடும்ப பிரச்சினை காரணமாக சில ஆண்டுகள் தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கியுள்ள அவர், விரைவில் நடிகர் ஜெய்யை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்யும், அஞ்சலியும் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் சமையல் அறையில் இருவரும் ஒன்றாக இருப்பது போலவும், அஞ்சலி ஜெய்க்கு உணவு பறிமாறுவது போன்ற புகைப்படங்களும் வெளியானது.
இந்த நிலையில், அஞ்சலி - ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பலூன்’ படத்தின் பிரஸ் மீட்டுக்கு வந்த அஞ்சலியிடம் திருமணம் குறுத்து கேட்ட போது, “ஜெய்யும் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். நல்ல கதாபாத்திரம் என்பதால் நடித்தேன்.
எங்கு என்றாலும் எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள். இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளூம் யோசனை இல்லை. நல்ல நல்ல படங்களில் நடித்து தேசிய விருது வாங்க வேண்டும், என்பது மட்டும் தான் எனது ஆசை.
2018 ஆம் ஆண்டு பிஸியாக இருக்கிறேன், நிறைய படங்கள் கையில் இருக்கின்றன. அதனால், தற்போது எனது முழு கவனமும் நடிப்பில் மட்டுமே இருக்கும்.” என்றார்.
ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...