Latest News :

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் - பட விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்!
Tuesday August-08 2017

விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து, விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘நம்ம விவசாயம்’ என்ற அமைப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த அமைப்பு குறித்தும் இதன் பணிகள் குறித்தும் மக்களிடையே கொண்டுச் செல்ல, ‘நம்ம விவசாயம்’ என்ற தலைப்பு பாடல் மற்றும் காட்சி தொகுப்பு ஒன்றை இக்குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

 

நம்ம மூவீஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிக்க, சத்யா இசையில், கிருதயா பாடல் வரிகளில், அன்பரசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘நம்ம விவசாயம்’ பாடல் மற்றும் காட்சி தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. 

 

இதில் கலந்துக்கொண்ட நடிகர் லொல்லு சபா ஜீவா பேசும் போது, ”நம்ம விவசாயம் விழிப்புணர்வு நிகழ்வு பாராட்டப்பட வேண்டிய விஷயம். இங்கு திரையிடப்பட்ட குறும்படத்தை என்னால் ரசிக்க முடியவில்லை, இந்த உணர்வுப்பூர்வமான விஷயத்தை மனதால்  உணர்கிறேன். விவசாயம் இணையத்தில் இளைஞர்கள் மூலம் அதிகம் விவாதிக்கப்படுகிறது. அது இணையத்தை தாண்டி வர வேண்டும். விவசாயத்தை தனியாக காப்பாற்ற முடியாது. ஒட்டு மொத்த அமைப்பும் மாறி, ஆட்சி மாற்றம் நடந்து, நல்ல தலைமை அமைந்தால் தான் மாற்ற முடியும். இப்போது நடக்கும் சம்பவங்களை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே அடுத்து முறையும் இவர்களுக்கே ஓட்டு போட்டு தவறு செய்து விடாதிர்கள். நான் எந்த கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, ஆனால் தற்போது தமிழகத்தில் நிலவும் சூழலைக்கொண்டே இதை சொல்கிறேன். விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் நேரடியாக மக்களிடம் போய் சேர வேண்டும். விவசாயமும் சினிமாவும் கூட ஒரே நிலையில் தான் இருக்கின்றது. சரியான கட்டமைப்பு இல்லை. இரண்டிலுமே இடைத்தரகர்கள் தான் பயனடைகிறார்கள்.” என்றார்.

 

பாடலாசிரியர் கிருதயா பேசும் போது, “விவசாயம் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. மூன்று போகம் விளையக்கூடிய தஞ்சையில், யாரும் காசு கொடுத்து அரிசி வாங்கியதே இல்லை. ஆனால் தற்போது நிலைமை தலைகீழ். தஞ்சையில் இருந்த ஆறுகள் கூட இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபாவை அழிக்க, அவர்களின் பொருளாதாரத்திற்கு அடித்தளமான விவசாயத்தை அழிக்க திட்டமிட்டது. விஷ விதைகளை தூவி நிலத்தை பாழ்படுத்தியது. அதை மீட்டெடுக்க ஃபிடக் காஸ்ட்ரோ பெரும் முயற்சி எடுத்தார். ஃபிடல் காஸ்ட்ரோ செய்த பசுமை புரட்சி இங்கு கூடிய விரைவில் நிகழும். இந்த ஆல்பத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவை அணுகினோம். 6 மாதம் அவருக்காக காத்திருந்தும் அவரின் தொடர் அலுவல்களால் அவரால் இசையமைக்க முடியவில்லை. உடனடியாக இளையராஜாவால் பாராட்டப்பட்ட சி.சத்யாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்தோம். அவரின் இசை தான் இந்த குறும்படத்திற்கு ஜீவன்.” என்றார்.

 

தமிழ்நாட்டில் குறு விவசாயிகள் மட்டும் 82 சதவீதம் இருக்கிறார்கள். சொந்த முயற்சியில் அரசின் ஆதரவு இல்லாமலேயே விவசாயம் செய்து வருகிறார்கள். அரசின்  மானியமும் கிடைப்பதில்லை. நம்ம விவசாயம் சார்பில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விவசாயத்தையும், விவசாயிகளையும் ஆதரிப்போம் என்றார் ஷங்கர்.

 

விவசாயம் இப்போதிருக்கும் சூழலில் அதைப்பற்றிய செய்திகளை பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தேனே தவிர, என்னால் எதையும் அதற்காக செய்ய முடியவில்லை. அந்த நேரத்தில் தான் நம்ம விவசாயம் பாடலுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. நானும் ஒரு சிறு துரும்பாக இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை நானே பரிசோதித்துக் கொண்ட உணர்வு கிடைத்தது என்றார் இசையமைப்பாளர் சத்யா.

 

அரசாங்கம் செய்ய வேண்டிய மிகப்பெரிய வேலையை ஆர்.கே மற்றும் 4 பேர் சேர்ந்து செய்ய இருக்கிறார்கள். 65 நாட்கள் விவசாயிகள், மற்ற துறையினர், பிரபலங்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து விவசாயம் பற்றிய ஒரு நிகழ்வை செய்ய இருக்கிறோம். நல்ல நோக்கத்துக்காக செய்வதால் தனியாக எந்த ஒரு தொலைக்காட்சியையும் நாங்கள் அணுகவில்லை. இது மக்களை சென்று சேர வேண்டும் என்பதே முக்கிய நோக்கம் என்றார் இயக்குனர் அன்பரசன்.

 

விவசாயிகளை காக்க சொந்த செலவில் ஒரு அமைப்பை தொடங்கியிருக்கிறார்கள். விவசாயிகளை காப்பாற்றுகிறோம் என்பதை விட நம்மை நாம் காப்பாற்றிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. மிகப்பெரிய போராட்டத்தை இந்த அமைப்பு சந்திக்க வேண்டி இருக்கும், அதை மீறி இந்த நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்றார் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா. 

 

விழாவில் ஒளிப்பதிவாளர் மோகன், பாபு, இயக்குனர் சதீஷ், எடிட்டர் கேசவன், பாடகர் செந்தில் தாஸ், நடிகர்கள் பவுளி ஜெய்சன், பூங்கொடி, ராஜ், அர்ச்சனா, கோதண்டம், பேபி கோபிகா, பேபி ஷீபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related News

160

’பிரேமலு’ மாதிரி ’2K லவ் ஸ்டோரி’ பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இருக்கும் - இயக்குநர் சுசீந்திரன் உறுதி
Thursday January-23 2025

சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...

விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday January-23 2025

இயக்குநர்  எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...

’ஆஃபிஸ்’ தொடரின் தலைப்பு பாடலை வெளியிட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Thursday January-23 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின்  டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...

Recent Gallery