ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முதல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குநர் ராஜமவுலியின் தந்தையும், எழுத்தாளருமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதி வருவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும், ‘முதல்வன் 2’ படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தில் ஹீரோவாக விஜய் அல்லது ரஜினிகாந்த் இருவரில் ஒருவர் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கத் தான் வேண்டும்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...