Latest News :

நிரந்தரமாக பிரிந்த தனுஷ் - அனிருத் கூட்டணி!
Monday December-25 2017

தனுஷ் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட அனிருத், ஒரு சில படங்களிலேயே முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்ததோடு, விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கினார்.

 

வெற்றிப் பாடல்கள் கூட்டணியாக திகழ்ந்த தனுஷ் - அனிருத் கூட்டணி படங்களில் மட்டும் ஒன்றாக பணிபுரியாமல், நண்பர்களாக பல விஷயங்களில் ஒன்றாகவே இருந்தார்கள். இது குறித்து பல கிசுகிசுக்களும் வெளியாயின.

 

இதற்கிடையே, அனிருத்தும் தனுஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தார்கள். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இருவர் தரப்பில் இருந்தும் வெளிப்படையாக எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அதே சமயம், அனிருத்தின் இசையால் வெற்றிப் பெற்ற ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்த தனுஷ், தான் இயக்கி நடித்த ‘பா.பாண்டி’ படத்திற்கும் வேறு ஒரு இசையமைப்பாளருடன் இணைந்ததோடு, அந்த இசையமைப்பாளரை வெகுவாக புகழ்ந்தும் பேசினார்.

 

இருந்தாலும், தனுஷும், அனிருத்தும் உறவினர் என்பதால், அவர்களை ஒன்று சேர்க்க அவர்களது குடும்பத்தார் சமாதானத் தூதுவர்களாக மாறினாலும், தனுஷ் அனிருத் மீது ரொம்பவே கோபமாக இருப்பதோடு, இனி ஜென்மத்திற்கும் அனிருத்துடன் இணையப் போவதில்லை என்று கூறியதாகவும் தகவல் வெளியாகின.

 

இந்த நிலையில், இந்த தகவலை மெய்ப்பிக்கும் வகையில், ’மாரி 2’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ள தனுஷ், அதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

இந்த படத்தின் முதல் பாகத்திற்கு அனிருத் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

1615

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
Wednesday June-26 2024

விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...