சுந்தர்.சி இயக்கத்தில் மிகப்பெரிய பிரம்மாண்ட படமாக உருவாக உள்ள சங்கமித்ரா படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமான ஸ்ருதி ஹாசன், திடீரென்று படத்தில் இருந்து விலக, வேறு ஹீரோயினை தேட தொடங்கிய படக்குழுவினர், அப்படியே படத்தின் மற்ற பணிகளிலும் ஈடுபட்டு வந்தது.
தற்போது சங்கமித்ரா படத்தின் ஹீரோக்களான ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் படத்திற்கு ஏற்ற கெட்டப்போடு, குதிரை ஏற்றம், வாள் சண்டை ஆகியவற்றின் பயிற்சிகளை முடித்துக்கொண்டு தயாராக இருக்க, ஐதராபத்தில் பிரம்மாண்ட செட்டும் தயாராகிவிட்ட நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரமான சங்கமித்ரா மட்டும் இன்னும் கிடைக்கவில்லையாம்.
ஹன்சிகா சங்கமித்ராவாக நடிப்பார் என்று வெளியான தகவலை படக்குழுவினரே மறுத்துவிட்டதால், ஹீரோயின் வேட்டை தொடர்ந்து ஈடுபட்டு வரும் சுந்தர்.சி, தனது கனவு படத்திற்கான கனவு நாயகி கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...