Latest News :

கொடூர சம்பவம் - கார்த்தி ரசிகர் மன்ற நிர்வாகி பலி!
Tuesday December-26 2017

நடிகர் கார்த்தி ரசிகர் மன்ற நிர்வாகி சென்னையில் நடந்த கொடூர விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கார்த்தி மக்கள் நல மன்ற திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஜீவன்குமார் (வயது27). இவர் தனது நண்பர்கள் தினேஷ், நாகராஜ் ஆகியோருடன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கார்த்தி என்பவர் காரை ஓட்டினார். தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்தது. 

 

இதில் பலத்த காயம் அடைந்த  நான்குபேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஜீவன்குமார், தினேஷ் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

 

ஜீவன்குமாருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜீவன்குமார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி, அவரது இறுதிச் சடங்கில் நேரில் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளார்.

Related News

1630

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
Wednesday June-26 2024

விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...