பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த சில வாரங்களாக பரபரப்பு குறையாமல் நகர்த்தி வந்த ஓவியா, தற்போது அந்த வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். அவரது வேலை பார்க்கும் நபராக பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காயத்ரியை தேர்வு செய்திருக்கிறார்கள்.
ஏற்கனவே, ஓவியாவை சேரி பிஹேவியர் என்று கூறியதோடு, அவ்வபோது கெட்ட வார்த்தைகளையும் பேசி வந்த காயத்ரி, வெளியே வரட்டும் அவளை பார்த்துக்கொள்கிறேன், அறை மணிநேரம் கேமிராவை நிறுத்தினால் போதும் அவளை ஒரு வழி செய்து விடுவேன், என்றெல்லாம் பேசி வந்தார்.
இந்நிலையில் கமல்ஹாசன் கடந்த வார எபிசோடுகளில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்தார். அப்போது காயத்ரியிடம் கெட்ட வார்த்தை பேசியது குறித்து விசாரித்த அவர் காயத்ரியை கண்டித்தார்.
கமல்ஹாசனின் கண்டிப்பை பொறுத்துக் கொள்ள முடியாத காயத்ரி, தற்போது கமலையே விமர்சித்துக் கொண்டிருக்கிறார். தான் கெட்ட வார்த்தை பேசுவதாக மக்களிடம் தூண்டி விடுவதே கமல் தான் என்று குற்றம் சாட்டியுள்ள அவர், தன்னை திருத்த தனது அம்மாவை தவிர யாருக்கும் உரிமையில்லை என்று, கமல்ஹாசன் தன்னை எரிச்சல் படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை...
யாஷின் 'டாக்ஸிக்- ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் -அப்ஸ் ' உலகளாவிய பார்வையாளர்களுக்காக எல்லைகளைத் தகர்த்து ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமாகும்...