நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கூடவே, சேவ் சக்தி என்ற பெயரில் பெண்களுக்கு உதவும் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், வரலட்சுமி டாஸ்மாக் மது பாரில் பீர் பாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இது ஒரு படப்பிடிப்புக்காகதான் என்பது புகைப்படத்தை பார்த்தாலே தெரிகிறது. விமலுடன் வரலட்சுமி ‘காதல் மன்னன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்காக தான் வரலட்சுமி டாஸ்மாக் பாரில் பீர் பாட்டிலுடன் அமர்ந்திருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. வரலட்சுமியுடன் இயக்குநர் விமலும் அமர்ந்திருக்கிறார்.
இந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள வரலட்சுமி, "குடிக்கலாமா.. வேணாமா? முடிவெடுக்கும் நேரம்" என்று பதிவிட்டுள்ளார்.
To drink or not to drink...Tasmac....decision time... fooling around on sets of #kadhalmannan @kumaranmannai and Vimal.. heheh pic.twitter.com/6ucotleksM
— varu sarathkumar (@varusarath) December 27, 2017
தமிழ் திரைப்படம் MAX-இன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் இன்று பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது...
டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் ’அகத்தியா’...
Coke Studio Tamil has wrapped up its remarkable Season 2, leaving a lasting impact by celebrating Tamil music and culture with a stellar lineup of artists...