Latest News :

தணிக்கை குழுவினரிடம் பாராட்டு பெற்ற ‘முந்தல்’!
Thursday December-28 2017

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றியுள்ள பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஜெயந்த், ‘முந்தல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

 

சமூக அக்கறைக்கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் (Harvest Moon Pictures) நிறுவனம் சார்பில் டாக்டர் கே.பாலகுமரன் தயாரித்துள்ளார். அப்பு கிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில் ஹீரோயினாக முக்‌ஷா நடிக்க, இவர்களுடன் நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், அழகு, மகாநதி சங்கர், போண்டா மணி, வெங்கல் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரிஷா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

 

புற்று நோயை முற்றிலுமாக குணப்படுத்த கூடிய மருந்துகளை நமது முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டாலும், வியாபார நோக்கில் அதனை சிலர் மறைத்து வைத்துவிட்டனர். அப்படி மறைக்கப்பட்ட ஒரு அபூர்வ மருந்து தயாரிக்க கூடிய பார்முலா எழுதப்பட்ட ஓலைச்சுவடியை தேடி ஹீரோ செல்ல, அதே ஓலைச்சுவடியை தேதி மேலும் பலர் பயணிக்கிறார்கள். மக்களின் நலனுக்காக அந்த ஓலச்சுவடியை ஹீரோ கைப்பற்ற முயற்சித்தாலும், சிலர் அதை வியாபார நோக்கத்திற்காக கைப்பற்ற நினைக்கிறார்கள், இறுதியில் அந்த ஓலைச்சுவடி யார் கைக்கு கிடைத்தது, என்பது தான் இப்படத்தின் கதை.

 

இந்த கதையை வெறும் கண்பனையாக மட்டும் சொல்லாமல், இதற்காக சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்ட இயக்குநர் ஜெயந்த், படத்தில் பல அறிய விஷயங்களை சொல்லியிருக்கிறார். சித்தர்கள் பற்றியும், அவர்களிடம் இருந்த மருத்துவ சக்திகள் பற்றியும் சொல்லியிருப்பவர், அதற்கான ஆதாரங்களோடு சொல்லியிருப்பது தான் தனி சிறப்பு.

 

இப்படி சமூக அக்கறையுடன் கூடிய, இந்த படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கை குழுவினர், படத்திற்கு எந்தவித கட்டும் கொடுக்காமல் ‘யு’ சான்றிதழ் வழங்கியதோடு, படத்தை பாராட்டி இயக்குநர் ஜெயந்துக்கு இனிப்பும் வழங்கியுள்ளனர். தணிக்கை குழு அதிகாரிகளின் இத்தகைய செயல் மூலம் இயக்குநர் ஜெயந்த் உள்ளிட்ட ‘முந்தல்’ படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்படத்தை ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Related News

1647

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...