Latest News :

புதுமுகங்கள் நடிக்கும் ‘பார்க்கத் தோனுதே’
Saturday December-30 2017

வாசவி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.கே.மாதவன் தயாரிக்கும் படத்திற்கு ’பார்க்கத் தோனுதே’ என்று பெயரிட்டுள்ளனர்.

 

இந்த படத்தில் ஹர்ஷா கதானாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சாரா நடிக்கிறார் மற்றும் பாண்டு, அப்பு இவர்களுடன் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

 

ஒஞ்சியப்பன் பாடல்கள் எழுதும் இப்படத்திற்கு மனீஷ் இசையமைக்க, ஜி.ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். லெனின் சந்திரசேகரன் எடிட்டிங் செய்ய வி.கே.மாதவன் தயாஇக்கிறார்.

 

இப்படத்தை எழுதி இயக்கும் ஜெய் படம் குறித்து கூறுகையில், “வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஹர்ஷாவும் அவனது நண்பர்களும் காமெடி செய்து கொண்டு ஜாலியாக அந்த கிராமத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறவர்கள்.

 

அப்படிப் பட்ட ஹர்ஷா அதே கிராமத்தில்  இருக்கும் பெண் சாரா மீது காதல் கொள்கிறான். இருவரும் காதலர்களாக வலம் வருகிறார்கள்.

 

கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் சாராவுக்கு பேய் பிடித்துக் கொள்கிறது. அவள் மீதிருந்த பேய் விலகியதா? காதலர்கள் ஒன்றினைந்தார்களா? என்பது தான் கதை.

 

காதல் காமெடி ஆக்‌ஷன் திகில் கலந்த படமாக பார்க்கத் தோனுதே உருவாகி உள்ளது. படப்பிடிப்பு கிருஷ்ணகிரி கொடைக்கானல் ஒகனேக்கல் போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது. படம் விரைவில் வெளியாகிறது.” என்றார்.

Related News

1671

’இந்தியன் 2’ படத்திற்காக லைகா நிறுவனம் மேற்கொள்ளும் பிரமாண்ட விளம்பர பணிகள்!
Friday June-28 2024

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பர பணிகளை லைகா நிருவனம் மிக பிரமாண்டமான முறையில் செய்து வருகிறது...

’கொட்டேஷன் கேங்’ படம் சன்னி லியோன் மீதான உங்கள் பார்வையை மாற்றிவிடும் - நடிகை பிரியாமணி நம்பிக்கை
Friday June-28 2024

ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘கொட்டேஷன் கேங்’...