Latest News :

’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் வேடத்திற்கு அது இல்லையாம்!
Monday January-01 2018

தமிழ் சினிமாவில் தற்போது நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். வருகிற பொங்கல் அன்று வெளியாகவுள்ள ஸ்டுடியோ கிரீன் K.E. ஞானவேல் ராஜாவின்  “ தானா சேர்ந்த கூட்டம் “ படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவர் தான். தானா சேர்ந்த கூட்டம் படத்தை பற்றியும் , தன்னுடைய கதாபாத்திரம் மற்றும் தன்னோட நடித்த நடிகர்கள் மற்றும் டெக்னிஷியன்ஸ் பற்றியும் கூறுகிறார் கீர்த்தி சுரேஷ்.

 

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நான் பிராமண பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது. நான் ஹுமர் கலந்த சஸ்பன்ஸ் வேடத்தில் நடிக்கிறேன். இயக்குநர் விக்னேஷ் சிவன் கதை சொல்லும் போதே எனக்கு கதையும் என்னுடைய கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது.

 

பள்ளி பருவத்திலேயே நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. என்னுடைய அம்மா சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமாருடன் மூன்று படத்தில் நடித்துள்ளார். நான் ஸ்கூல் படிக்கும் போது நான் சிவகுமார் சாரின் மகன் சூர்யாவுடன் ஒரு நாள் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறியிருந்தேன். அது இன்று நிஜமாகியுள்ளது எனக்கு மகிழ்ச்சி. சூர்யா சார் மிகவும் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார். ஆனால் அவரிடம் நான் சந்தேகம் கேட்கும் போது எனக்கு சொல்லிகொடுத்து உதவுவார்.

 

செந்தில் சாரோட நடித்தது ஒரு நல்ல அனுபவம். அவர் Teddy Bearரை போல கியூட் ஆனா மனிதர். அவரோடு நடித்தது எனக்கு மறக்க முடியாத நல்ல அனுபவம். ரம்யா கிருஷ்ணன் அவர்கள் அம்மாவின் தோழி. எனக்கு அவங்களை சின்ன வயதிலிருந்தே தெரியும். பாகுபலி வெளியான நேரத்தில் அவங்களோடு நடித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தான் வசனத்தை கூறுவார். அதை நாங்கள் அங்கே டெவெலப் செய்து நடிப்போம். அப்படி நடிக்கும் போது அது சிறப்பாக இருக்கும். அனிருத் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. 3 பாடல்கள் தற்போது சிங்கிளாக வெளிவந்து மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது சந்தோஷமாகவுள்ளது என்றார் கீர்த்தி சுரேஷ்.

Related News

1689

சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரார் திரில்லர் ’7G’ ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday June-25 2024

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது...

அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ’டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
Tuesday June-25 2024

ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது...

’கல்கி 2898 கி.பி’ படத்தின் க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியானது!
Tuesday June-25 2024

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் ’கல்கி 2898 கிபி’ படத்தின் பேச்சாகவே இருக்கிறது...