ஜெய் - அஞ்சலி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பலூன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று படக்குழுவினர் அறிவித்திருந்தாலும், படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே விமர்சகர்களின் கருத்து.
இந்த நிலையில், பட ஹிட் என்றாலும் அதை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை, என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பலூன் பட இயக்குநர் சினிஷ், ஹீரோ ஜெய்யால் படத்திற்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டிருப்பதாக மறைமுகமாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”பலூன் ஹிட்.. தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், நானும் மகிழ்ச்சி தான். ஆனால் தனிப்பட்ட முறையில் இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் நிலையில் நான் இல்லை.
சிலரின் ஈடுபாட்டால் இந்த ப்ராஜக்ட் நாசமாகிவிட்டது. இந்த துறையில் உள்ள சிலரால் தாமதம் ஏற்பட்டு பட்ஜெட் அதிகரித்து தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஆனது. இயக்குனர், ஹீரோ, ஹீரோயின், துணை நடிகர்கள், டெக்னீஷியன்கள், வினியோகஸ்தர்கள் அல்லது தயாரிப்பாளர்கள் என யாராக இருந்தாலும் நஷ்டத்திற்கு காரணமாக இருந்தால் அதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டும்.
கடின உழைப்பை நம்புவோருக்கான இடம் இது. சிலர் அம்மாவாச சத்யராஜ் மாதிரி வந்து வளர்ந்து அதன் பிறகு ஓவராக செய்கிறார்கள். அண்மையில் ஒரு தயாரிப்பாளர் தனது பட நஷ்டம் பற்றி கூறியும் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது.
நான் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். இந்த அறிக்கையால் என் கெரியரே நாசமாக போனாலும் மகிழ்ச்சியுடன் ஏற்பேன். காரணம் ஒரு முதலீட்டாளராக பணத்தை இழக்கும் வலி எனக்கு தெரியும். என்னிடம் ஆதாரம் உள்ளது. தேவைப்படும்பது போது அவற்றை சமர்பிக்க நான் தயார். அதனால் தாமதம் மற்றும் நஷ்டத்திற்கு காரணமானவர்கள் தானாக முன்வந்து பொறுப்பேற்று தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
இதில் எந்த இடத்திலும் அவர் ஜெயின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், பொதுவாக நடிகர்களாக இருந்தாலும் என்று அவர் சொல்லியிருப்பது ஹீரோ ஜெய்யை தான் என்றும், ஜெய்யால் தான் இப்படம் தாமதம் ஆனது என்றும் கூறப்படுகிறது.
80-களின் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் வலம் வந்த நடிகை அம்பிகா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவரது முகத்தோற்றம் கொண்ட ஒரு நடிகையை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு ஒன்று முயற்சித்து வருகிறது...
இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்...
’வேற மாரி ஆபிஸ்’, ‘வேற மாறி லைவ் ஸ்டோரி’ தொடர்கள் மற்றும் ‘மால்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த விஜே பப்பு, ‘ராகவன் : Instinct’ என்ற இணையத் தொடர் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்...