தமிழ் சினிமாவின் டார்லிங்கான நடிகை ஹன்சிகா, விமர்சையாக இல்லாமல், எளிய முறையில் நேற்று (ஆகஸ்ட் 9) தனது 26 வது பிறந்தநாளை குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடினார்.
காலையில் தன் தாயார் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் பங்கேற்ற ஹன்சிகா, பிறகு தான் தத்தெடுத்து வளர்க்கும் ஆதரவற்ற குழந்தைகளோடு சேர்ந்து கேக் வெட்டியதோடு, தனது பிறந்தாளுக்காக தனக்கு வந்திருந்த பரிசு பொருட்களை அக்குழந்தைகளுக்கு வழங்கினார்.
இது மட்டும் அல்லாது, ”சந்தோஷமாய் இருப்பது, எளியோர்க்கு உதவுவது மற்றும் ஒழுக்கம் கடைபிடிப்பது'' என்ற தனது வாழ்க்கை தீர்மானத்தை, தனது பிறந்தநாள் தீர்மானமாகவும் பின்பற்ற இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...