எஸ்பி பிக்செல்ஸ் சார்பாக எஸ். சுரேஷ் பாபு, பி. பெருமாள் சாமி இணைந்து, மிக பிரம்மாண்டமான பொருட்செலவில், பல பிரமிக்கதக்க காட்சி அமைப்புகளுடன் தயாரிப்பில் உள்ள ’கூட்டாளி’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
சென்னையில் துவங்கி, பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் என பல இடங்களில் பரபரப்பாகப் படப்பிடிப்பு நடைபெற்றி்ருக்கிறது.
துணை, இணை இயக்குநராகப் பல திரைப்படங்களில் பணியாற்றிய எஸ்.கே மதி, இத்திரைப்படத்தின் மூலம் கதை, திரைகதை, வசனம் எழுதி இயக்குநராகிறார்.
முற்றிலும் புது முகங்களை வைத்து உருப்பெறும், இத்திரைப்படத்தில் சதீஷ் கதாநாயகனாகவும், கிரிஷா குரூப் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் கல்யாண், அருள்தாஸ், கௌசல்யா உதயபானு மகேஸ்வரன், போஸ்டர் நந்தகுமார், அப்புக்குட்டி, கலையரசன், அன்புராஜ், ஆகியோரும் திரையை பகிர்ந்து கொள்கின்றனர்.
பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட நால்வர் நண்பர்களாக, அவர்களோடு ஒரு பெண்ணும் தோழியாகிறார். வாழ்விலும் தொழிலிலும் ஒரு தோழியால் வரும் பிரச்சினைகளையும், அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை ஜனரஞ்சகமாகவும், விறுவிறுப்புடனும், படமாக்கி இருக்கிறார்கள்.
ஒளிபதிவாளர் சுரேஷ் நடராஜன், படத்தொகுப்பு பிரஷாந்த் தமிழ்மணி், நடனஅமைப்பு கல்யாண், ரமேஷ், மற்றும் கலை சிவக்குமார், சண்டைகாட்சி அமைப்பு ராம்போ விமல், தயாரிப்பு நிர்வாகம்.ஆர்.கிருஷ்ணபாண்டியன் ஆகியோர் இணைந்து இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்திருக்கிறார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...