சமீபத்தில் வெளியான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத காரணத்தால், படத்தை புரோமோட் செய்யும் முயற்சியில் நடிகர் சூர்யா ஈடுபட்டுள்ளார். இதற்காக, அவர் தமிழகம் மட்டும் இன்றி ஆந்திராவிலும் திரையரங்குகளுக்கு சென்று விசிட் செய்து வருகிறார்.
சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள திரையரங்கும் ஒன்றில் ரசிகர்களை சந்தித்த சூர்யா, தற்போது ஆந்திர திரையரங்குகளுக்கு விசிட் செய்து வருகிறார்.
இந்த நிலையில், ராஜமுந்திரியில் உள்ள திரையரங்கம் ஒன்றுக்கு நேற்று சென்ற சூர்யா, அங்கிருந்த கூட்டத்தை பார்த்து மிரண்டுபோய்விட்டார். மேலும் சூர்யாவை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொள்ள முயற்சித்தனர். இதனால் பதறிய சூர்யா, திரையரங்கின் பின்புறமாக இருந்த கேட்டில் ஏறி குதித்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...