அறிமுக இயக்குநர் காளிஸ் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் படம் ‘கீ’. மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இதில் நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி, ஜீவா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். மேலும், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், “சிம்பு குறித்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அதன் மீது விஷால் எத்தகைய நடவடிக்கை எடுத்தார் என்பதே தெரியவில்லை” என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவர், இதுபோன்ற பிரச்சினைகளை சங்கத்தில் தான் பேச வேண்டும், இப்படிப்பட்ட பொது நிகழ்ச்சிகளில் பேசக்கூடாது, என்றும் கூறினார்.
தயாரிப்பாளர்களின் இந்த வாக்குவதாதத்தால் அரங்கில் சிறிது நேரம் சலசலப்பும் பரபரப்பும் நிலவியது. பிறகு சில தலையிட்டு பிரச்சினையை தீர்த்து மீண்டும் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்.
இதன் பிறகு பேச வந்த நடிகர் விஜய் சேதுபதி, கமலா தியேட்டரில் இருக்குமோ அல்லது தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கிறோமா, என்பதே தெரியவில்லை அந்த அளவுக்கு மாற்றிவிட்டார்கள். இப்படிப்பட்ட விஷயங்களை பேச இடம் இருக்கிறது. அங்கு பேசலாம். அதைவிட்டு விட்டு, இப்படி பொது இடத்தில் பேசி நம்மை நாமே அசிங்கப்படுத்திக் கொள்ள கூடாது.
சினிமாவில் பல துறைகள் இருந்தாலும் மக்கள் பொதுவாக அனைவரையும் சினிமாக்காரன் என்ற முத்திரையோடு தான் பார்க்கிறார்கள். அதனால், சிலர் செய்யும் தவறு பலரை பாதிக்கிறது. எனவே, நாமே நம்மை அசிங்கப்படுத்திக் கொள்ளாமல் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தயாரிப்பாளர்களை பெரிதும் பாராட்ட வேண்டும், எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் பல கோடிகளை போட்டு படம் எடுக்கிறார்கள், அவர்களது படம் ஓடினால் தான் சினிமா வளரும், அதை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் பிழைப்பார்கள்.
நாலு படம் ஓடிவிட்டால் பலர் தேடி வருவார்கள், அதே படம் ஓடவில்லை என்றால் ஒருத்தன் வர மாட்டான், இது தான் சினிமா. படம் சரியா போகலனா நம்ம இடத்த பிடிக்க அடுத்தவங்க ரெடியா இருப்பாங்க, நாம நக்கிக்கிட்டு தான் போகணும். அது தான் நிஜமான நிலை. அப்படி இருக்க சினிமா மூலம் நாமே நம்மை அசிங்கப்படுத்திக் கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கீ படத்தின் டிரெய்லர் பார்த்தேன், ரொம்ப சிறப்பாக இருந்தது. ஜீவாவை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவர் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் அவருக்கு பொருத்தமாக இருக்கும். அவர் நடித்த படங்கள் அனைத்தையும் நான் விரும்பி பார்ப்பேன். சில படங்கள் தோல்வியடைந்தாலும், அந்த படத்தில் அவரது வேலையை சரியாக செய்திருப்பார். அதுபோல இந்த படத்திலையும் அவர் சிறப்பாக பணியாற்றியிருப்பார். அதனால் நிச்சயம் இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கும்.” என்றார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...