சினிமா மற்றும் சீரியலில் பிரபல நடிகையாக இருக்கும் பலர் தங்களது வாழ்க்கையில் பெரிதும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரபல சீரியல் நடிகையான சாந்தி வில்லியம்ஸ் மிகப்பெரிய சோகத்திலும், வறுமையிலும் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
‘சித்தி’, ‘மெட்டி ஒலி’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களில் அம்மா வேடங்களில் நடித்தவர் சாந்தி வில்லியம்ஸ். இவரது கணவர் வில்லியம்ஸ் மலையாள சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார். சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் படுத்த இவர், சாந்தி வில்லியம்ஸ் ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது உயிரிழந்துவிட்டார்.
அப்போது மிகவும் கஷ்ட்டப்பட்ட சாந்தி வில்லியம்ஸ், தனது நான்கு குழந்தைகளையும் வளர்க்க ரொம்ப சிரமப்பட்டவர், தன்னிடம் இருந்த 1000 புடவைகளை விற்று குழந்தைகளை படிக்க வைத்தாராம். பிறகு ராதிகா மூலம் ‘சித்தி’ சீரியலில் நடிக்க வாய்ப்பு பெற்றவர் அப்படியே பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்ததால் வறுமையில் இருந்து விடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும், தனது கணவர் இறந்ததை மட்டும் அவரால் இன்னும் தாங்க முடியவில்லையாம்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...