தமிழகத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்று ‘கடவுள்’. வேலு பிரபாகரன் இயக்கத்தில் உருவான இப்படம் பல தடைகளை கடந்து, பல காட்சிகளை கட் செய்தும் வெளியானது. நாத்திகம் பேசும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘கடவுள் 2’ என்ற தலைப்பில் வேலு பிரபாகரன் எடுக்கிறார்.
பிளாக் மூன் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜே.கே ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் வேலு பிரபாகரன், அஜய், செலம் ஆர்.ஆர்.தமிழ்செல்வன், கடவுள் கண்ணன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி வேலு பிரபாகரன் இயக்குகிறார். இளையராஜா இசையமைக்க, கலையை கிருஷ்ணா நிர்மாணிக்கிறார். செலிதாஸ் இணை இயக்கத்தை கவனிக்க, மக்கள் தொடர்பை நிகில் கவனிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...