‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கன்ஸ்டோரிடியம் பட நிறுவனத்தின் தயாரிப்பாளர் டி.சிவகுமார் தயாரிக்கும் அடுத்த படம் ‘பக்கா’. விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி ஆகியோருடன் பிந்து மாதவி, சூரி, சதீஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
சி.சத்யா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் இன்று எளிமையான முறையில் வெளியிடப்பட்டது. இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் ‘பக்கா’ பட பாடல்களை வெளியிட இயக்குநர் பேரரசு பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் சி.சத்யா, படத்தின் இயக்குநர் சூர்யா மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் பி.சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...